தெலுக் பங்லீமா காராங்கில் உரிமமின்றி கடை நடத்தி வந்த அந்நிய நாட்டவரின் பொருட்கள் பறிமுதல்!
- Muthu Kumar
- 09 Aug, 2025
(எஸ்.எஸ்.மணிமாறன்)
பந்திங், ஆக. 9-
தெலுக் பங்லீமா காராங் சிற்றூரில் உரிமமின்றி கடை எடுத்து நடத்தி வந்த அந்நிய நாட்டவரின் பொருட்களை கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் அமலாக்க அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு கடைக்கும் சீல் வைத்தனர்.
2007 ஆம் ஆண்டின் நகராண்மைக் கழகச் சட்டம் 38(1) இன் கீழ் அந்நிய நாட்டவரிடம் எச்சரிக்கையுடன் கூடிய அபராதக் கடிதம் வழங்கியதோடு கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களை விசாரணைக்காக பறிமுதல் செய்து எடுத்துச் சென்றதாக அமலாக்க அதிகாரி ரஷிட் ரஹிம் தெரிவித்தார்.
கடையை வாடகைக்கு விட்டிருந்த அதன் உரிமையாளரும் கடையை எடுத்து நடத்திய அந்நிய நாட்டவரும் விரைவில் அழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அவர் குற்றம் கூறினார். குற்றம். நிரூபணமானால் இருவருக்கும் அபராதம், தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப் படலாம் என்று ரஷிட் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



