கூலாய் ம.இ.கா.வின் போராட்டம் தேவி ஸ்ரீ நாககன்னி ஆலயத்திற்கு புதிய இடம்!
- Muthu Kumar
- 21 Aug, 2025
(கோகி கருணாநிதி)
கூலாய், ஆக.21-
கூலாய் பண்டார் புத்ராவில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்களின் வழிபாட்டுத் தலமாக விளங்கிய அருள்மிகு தேவி ஸ்ரீ நாககன்னி ஆலயத்திற்கு, தற்போது புதிய இடத்தில் இரண்டரை மடங்கு பரப்பளவு கொண்ட நிலம் 2022ஆம் ஆண்டில் கிடைக்கப் பெற்றது. சுமார் ரி.ம 1,960,200 மதிப்புடைய இந்த நிலத்தின் செலவை ஐ.ஒ.ஐ சொத்துகுழு ஏற்றுக்கொண்டது.
2022ஆம் ஆண்டிலேயே ஆலயத்திற்கான நிலத்தின் பட்டா உறுதி செய்யப்பட்டிருந்தது
என ஜொகூர் மாநில வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி ஆட்சிக்குழுத் தலைவர் டத்தோ முகமட் ஜஃப்னி பின் முகமட் ஷீகோர் குறிப்பிட்டார்.
ஆலய நிலப் பிரச்சினையை தீர்க்க ம.இ.கா. மேற்கொண்ட போராட்டம் முக்கிய பங்கு வகித்ததோடு, முன்னாள் பிரதிநிதி சுப்பையா தொடங்கிய கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி, ஆலயம் அமைந்திருந்த முயற்சியை தற்போதைய கூலாய் ம.இ.கா. தலைவர் மற்றும் மாநில மன்ற உறுப்பினர் டத்தோ எ.சிவசந்திரன் வெற்றிகரமாக நிறைவு செய்தார். சமூக சேவையாளர்களின் உறுதுணை இப்பணிக்கு வலுசேர்த்ததாகவும் அவர் கூறினார்.
மலைப்பகுதியில் பலத்த காற்றால் மரம் சரிந்து விழுந்ததில் ஆலயம் சேதமடைந்து சுமார் ரி.ம 40,000 இழப்பு ஏற்பட்டது. இடத்திற்கு மாற்றும் திட்டத்தை ஆலயக் குழுவும் ம.இ.கா.வும் இணைந்து ஆலயத்தை புதிய முன்னெடுத்தன.புதிய இடத்தில் தற்காலிக ஆலயக் கட்டடம் ரி.ம 500,000 செலவில் அமைக்கப்பட உள்ளது. சிமெண்ட் தரை. மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்படும். உள்ளூராட்சி அனுமதி கிடைத்தவுடன் அடுத்த வாரமே பணிகள் தொடங்கி, மூன்று முதல் நான்கு மாதங்களில் நிறைவடையும் என அவர் குறிப்பிட்டார்.
"புதிய ஆலயப் பரப்பு 1 ஹெக்டேருக்கும் மேல் உள்ளது. இதில் 0.2 ஹெக்டேர் முக்கிய ஆலயக் சுட்டடத்திற்கும், 0.8 ஹெக்டேர் வெளிப்புற திறந்த பரப்பிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் நான்கு முதல் ஐந்து மாதங்கள் எடுக்கும்; இதன் மூலம் ஆண்டு இறுதிக்குள் முழுமையாக முடிக்கப்படும். கூடுதலாக, மேம்பாட்டாளர் மின்சாரம் மற்றும் நீர்வழங்கும் வசதிகளையும் ஏற்படுத்துவார் என்றார்.புதிய ஆலய இடம் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலும் சாலையோரத்தில் வசதியான இடத்தில் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



