RM3.1 மில்லியன் மதிப்புள்ள 10 அரசு அதிகாரிகளின் 36 வங்கிக் கணக்குகள் முடக்கப்படும்! – SPRM
- Thinagaren Sanggaren
- 16 Nov, 2025
நவம்பர் 16,
லஞ்சம் பெற்றதாகவும் ஊழலில் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் 10 அரசு அதிகாரிகளுடன் நிறுவன அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்ட வழக்கின் தொடர்ச்சியாக 36 தனிநபர் வங்கிக் கணக்குகளை முடக்க விண்ணப்பம் செய்யப்பட்டிருப்பதாக மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தெரிவித்தார். Op Bleach சோதனை நடவடிக்கையின் போது வெளிநாட்டினர்களைச் சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் அனுமதிக்க 10 அரசு அதிகாரிகளும் நிறுவன மேலாளருடன் இக்குற்றத்தைப் புரிந்திருப்பதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் அவர்களைக் கைது செய்திருந்தாலும் அவர்கள் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாக நம்பப்படும் வங்கிக் கணக்குகள் இன்னும் செயல்பாட்டில் இருப்பதாக மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டிருக்கும் நபர்களுக்குச் சொந்தமான 36 வங்கிக் கணக்குகளை அடையாளம் கண்டிருப்பதாகவும் அதன் மொத்த மதிப்பு RM3,121,813.10 என கணக்கிடப்பட்டிருப்பதால் தேசிய வங்கியின் மூலமாகச் சம்மந்தப்பட்ட 36 தனிநபர் வங்கிக் கணக்குகளையும் முடக்க விண்ணப்பம் செய்திருப்பதாக மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki விளக்கமளித்தார். முதற்கட்ட விசாரணையில் ஒவ்வொரு வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்தும் RM 600 முதல் RM 1,300 வரையில் சம்மந்தப்பட்ட 10 அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றது உறுதிச் செய்யப்பட்டிருப்பதாகவும் கைது செய்யப்பட்டவர்களின் 7 ஆண்கள் 4 பெண்கள் என்றும் அனைவரும் 30 முதல் 50 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



