கிறிஸ்துமஸ் என்றாலும் சாலை போக்குவரத்து விதிகளை மீறாதீர்! ஒரே நாளில் 4,433 சம்மன்கள்!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 25,

பண்டிகை காலச் சாலை போக்குவரத்து கட்டுப்பாட்டு நடவடிக்கையின் போது ஒரே நாளில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கும் மொத்தம் 4,433 சம்மன்கள் வழங்கப்பட்டிருப்பதாக ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Ab Rahaman Arsad தெரிவித்தார். நேற்று காலை தொடங்கி நள்ளிரவு 12.30 வரையில் ஜொகூரின் 47 சாலைகளில் சாலை போக்குவரத்து குற்றப்புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக Datuk Ab Rahaman Arsad தெரிவித்தார். 

கிறிஸ்மஸ் பண்டிகை விடுமுறைகளில் வெளியேறும் வாகனமோட்டிகள் போக்குவரத்து விதிகளை மீற கூடாது என்பதை நினைவில் கொள்ளும்படி Datuk Ab Rahaman Arsad வலியுறுத்தினார். ஒரு நாளுக்கு 22,000 முதல் 24,000 வாகனங்கள் ஜொகூருக்குள் நுழைவதாகவும், வெளியேறுவதாகவும் குறிப்பிட்ட அவர், அனைத்து சாலை பயனாளர்களுக்கும் காவல்துறை பாதுகாப்பை வழங்க வேண்டும் என்பதால் ஓப் கிறிஸ்மஸ் (Op Krismas) எனும் இச்சோதனை நடவடிக்கை ஜனவரி 1 வரையும் மேற்கொள்ளவிருப்பதாக ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Ab Rahaman Arsad தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *