‘Ops Hazard’ நடவடிக்கையில் 214 அபராதங்கள்: சுற்றுச்சூழல் குற்றங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை
- Surendran Sumdraraj
- 10 Apr, 2026
கோலாலம்பூர், ஏப். 10-
சுற்றுச்சூழல் குற்றங்களில் ஈடுபட்ட தொழிற்சாலைகள் மற்றும் வளாகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ‘Ops Hazard 1.0’ முதல் 3.0 வரை நடவடிக்கைகளில் மொத்தம் 214 அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கைகள் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி நிறைவடைந்தன.
இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர்தர் ஜோசப் குருப் தெரிவித்ததாவது, நாடு முழுவதும் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை, தொழிற்துறைகள் திட்டமிட்ட கழிவுகளை சரியாக நிர்வகிக்கிறார்களா என்பதை கண்காணிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டது என கூறினார்.
‘Ops Hazard 1.0’ நடவடிக்கையில், சட்டவிரோத கழிவு மூலங்களை கண்டறிவதில் கவனம் செலுத்தப்பட்டது. இதன் மூலம், தனிமையான தொழிற்பேட்டை பகுதிகளில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்ட மின்னணு கழிவுகள் (e-waste) கிடங்குகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அனுமதி இல்லாத கழிவு அகற்றும் சங்கிலிகளும் அடையாளம் காணப்பட்டன.
மேலும், சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974 மற்றும் திட்டமிட்ட கழிவுகள் தொடர்பான விதிமுறைகள் 2005 கீழ் பல்வேறு குற்றங்களுக்கு 17 அபராதங்கள் விதிக்கப்பட்டதாகவும், அவற்றின் மொத்த மதிப்பு RM34,000 ஆகவும், தண்டனைத் தொகை RM193,000 வரை உயர்ந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



