வரி செலுத்தாத அரசியல்வாதிகளின் பட்டியலை வெளியிடும் முன்னர் சாலை வரியைச் செலுத்துங்கள்! ANTHONY LOKE எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 26, 

சாலைப்போக்குவரத்து ஆணையத்தின் OPS LUXURY சோதனையில் பல்வேறு வகையிலான சொகுசு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வரும் நிலையில் அதிகமான வி.ஐ.பிகளும் அரசியல்வாதிகளும் அவர்கள் பயன்படுத்தும் சொகுசு வாகனங்களுக்குச் சாலை வரியைச் செலுத்தவில்லை என போக்குவரத்து அமைச்சர் ANTHONY LOKE குற்றச்சாட்டை முன்வைத்தார். அமைச்சின் ஆய்வின் படி இன்னும் RM35.7 மில்லியன் வரி செலுத்தபடாமல் நிலுவையில் இருப்பதாக அந்தோணி லோக் தெரிவித்தார். நாடு முழுவதும் நடத்தப்பட்ட OPS LUXURY சோதனையில் Rolls Royce, Lamborghini, Bentley, Ferrari, Porsche, ஆகிய வாகனங்கள் சாலை வரியை மீறியிருப்பதாகவும் அதில் TAN SRI, DATUK SERI, DATO எனும் வி.ஐ.பிக்களின் வாகனங்களும் அடங்கும் என அந்தோணி லோக் தெரிவித்தார்.

இதன் மூலமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அரசியல் தலைவர்களாக இருப்பவர்கள் அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்குச் சாலை வரியைச் செலுத்துவதில்லை என கண்டறியப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்ட அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலைத் தாம் கொண்டிருந்தாலும் அவர்களுக்கு இறுதியாக ஒருய் வாய்ப்பை அளித்து, செலுத்தப்படாத நிலுவையில் இருக்கும் சாலை வரியை விரைந்து செலுத்தும்படியும் அந்தோணி லோக் தெரிவித்தார். அரசியல்வாதிகளும் வி.ஐ.பிகளும் பொதுமக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். சாலை வரியைச் செலுத்தாமல் சொகுசு வாகனங்களில் பயணிக்கும் அரசியல்வாதிகளின் பெயர் பட்டியல் வெளியாகும் முன்னரே நீங்கள் வரியைச் செலுத்துங்கள் என அந்தோணி லோக் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *