BN அல்லது PN? - ம.இ.கா தலைவர் விளக்கம்!
- Shan Siva
- 02 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 2: ம.இ.கா
, Perikatan Nasional கூட்டணியில் இணைய வேண்டுமா என்பது குறித்து முடிவு எடுப்பதற்கு
முன்னர், அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களில்
அதன் கிளைகள் மற்றும் உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தவுள்ளதாக அதன்
தலைவர் SA Vigneswaran
தெரிவித்துள்ளார்.
கூட்டணியின் தலைமையை PAS ஏற்றுக்கொண்டுள்ள
நிலையில், அடிப்படை உறுப்பினர்கள் இந்த இணைப்புக்கு ஆதரவளிக்கிறார்களா என்பதை உறுதி செய்வதே இந்த
ஆலோசனையின் நோக்கம் என அவர் கூறினார்.
PAS தலைமையை ஏற்கிறோமா இல்லையா என்பது
முக்கியமல்ல. கடந்த ஆண்டே Perikatan
Nasional-இல் சேர்வது குறித்த தீர்மானம்
எடுக்கப்பட்டது என்று Universiti
Malayaவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு
அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
ம.இ.கா,
Barisan Nasional கூட்டணியிலிருந்து
விலகி Perikatan Nasional-இல் சேர்வது குறித்து மீண்டும்
பரிசீலிப்பது, PAS-இன் கொள்கைகளுடன் சம்பந்தப்பட்டதல்ல
என்றும் அவர் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து இறுதி முடிவு
எடுக்கும் முன், மாநில கிளைகளின் கருத்துகளை கேட்க
வேண்டியது அவசியம் என ம.இ.கா உயர்மட்டக் குழு கருதுகிறது என்றும்
அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



