ரஜினி ரசிகர்களுக்கு 2027ல் காத்திருக்கும் சர்ப்ரைஸ் - வைரமுத்து பகிர்ந்த தகவல்! For Rajini fans, a surprise awaits in 2027 - information shared by Vairamuthu

top-news
FREE WEBSITE AD

நடிகர் வைரமுத்துவும் ரஜினியும், முத்து முதல் எந்திரன் வரை பல்வேறு படங்களில் ஒன்றாக வேலை பார்த்திருக்கின்றனர். ரஜினியின் ஒருவன் ஒருவன் முதலாளி, பாட்ஷா பட பாடல்கள், கொஞ்சி கொஞ்சி, அரிமா அரிமா உள்ளிட்ட ரஜினியின் பல்வேறு ஹிட் பாடல்களை வைரமுத்துதான் எழுதி கொடுத்துள்ளார். இவர்கள் இருவரும் நெடுங்கால நண்பர்களாக இருக்க, இவர்களுக்குள் நிகழும் உரையாடல்களும் ஒரு காரணம். சமீபத்தில் கவிஞர் வைரமுத்துவை நடிகர் ரஜினிகாந்த் அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்திருக்கிறார். இது குறித்து வைரமுத்து மிக நீண்ட பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

ரஜினிகாந்த், என்னுடைய வீட்டிற்கு வந்து சந்தித்து தன்னிடம் அரசியல், எதிர்கால திட்டங்கள் என பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக எக்ஸ் தளத்தில் வைரமுத்து பதிவிட்டிருக்கிறார்."சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று எனது இல்லத்திற்கு வருகை தந்தார் 'பாசமுள்ள மனிதனப்பா - நான் மீசவச்ச குழந்தையப்பா' என்ற வரிகளுக்கு இப்போதும் அவர்தான் இலக்கியமாக இலங்குகிறார். வியப்புக்குரிய மனிதர்தான்" என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், "அடித்துக்கொண்டோடும் அரசியல் வெள்ளம், சாய்த்துவிட்டோடும் சமூகப் புயல் இரண்டையும் அரைநூற்றாண்டாய்க் கடந்து தன்னிடத்தை ஒருவர் தக்கவைத்துக் கொள்வது ஜாதகத்தால் ஆவதல்ல; சாமர்த்தியத்தால் ஆவது" என்று ரஜினி குறித்து மேலும் புகழ்ந்திருந்தார்.மேலும், உணவு முறை மற்றும் உடல் நிலை குறித்து தொடர்ந்து 100 நிமிடங்களுக்கும் மேல் சுவாரஸ்யமாக தொடர்ந்ததாக வைரமுத்து குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து, " எங்கள் நூறு நிமிட உரையாடலை 'கிரீன் டீ' கூடக் கெடுக்கவில்லை" என்று கூறியிருக்கிறார்.

"தமிழ்நாட்டின் நிகழ்கால வெப்ப அரசியல் குறித்து விவாதித்தோம். ஒவ்வொரு தரவிலும் அவருக்குள்ள ஆழமும் தெளிவும் உண்மையும் என் ஆர்வத்தைத் தூண்டின.வடநாட்டு அரசியல் குறித்தும் அங்கு நேரப்போவதாக நம்பப்படும் ஒரு திருப்பம் குறித்தும் அவர் சொன்னபொழுது நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்" என்று வைரமுத்து தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, இது என்ன திருப்பமாக இருக்கும் என்பது குறித்து ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

ரஜினி, தன்னிடம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான அவரது கலைப்பயணத்தின் திட்டங்களை விவரித்தார் என்று வைரமுத்து தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். தொடர்ந்து "2027 ரஜினி ரசிகர்களுக்குக் கொண்டாட்ட ஆண்டாக இருக்கும்; குறித்துக்கொள்ளுங்கள்" என்றும் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்."அவரிடம் முதிர்ச்சி தெரிகிறது; முதுமை தெரியவில்லை 'இளமை இனிமேல் போகாது முதுமை எனக்கு வாராது" என்று தான் என் ரஜினிக்காக எழுதிய லிரிக்ஸை குறிப்பிட்டு, "என் தமிழ் பொய்யாகவில்லை" என்றும் வைரமுத்து குறிப்பிட்டிருக்கிறார்.

ரஜினி, வைரமுத்துவிடம் அப்படி 2027ல் என்ன செய்யப்போவதாக தெரிவித்திருப்பார் என்பது குறித்த விவாதம்தான் தற்போது இணையத்தில் பேசு பொருளாக இருக்கிறது. ஒரு வேளை கமலுடன் அவர் இணைந்து நடிக்கப்போகும் படம் குறித்து பேசியிருப்பாரா, அல்லது புதிதாக வேறு ஏதும் ப்ளான் உள்ளதை பற்றி பேசியிருப்பாரா என்பது குறித்து ரசிகர்கள் சமூக ஊடகங்ஜளில் விவாதித்து வருகின்றனர்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *