முதலில் அரசியல்வாதிகளும் GLC தலைவர்களுமே எரிபொருள் மானியத்தை இழக்க வேண்டும் – அக்மால் சாலே
- Surendran Sumdraraj
- 13 May, 2026
கோலாலம்பூர், மே 13-
எரிபொருள் மானியத்தை குறைக்க வேண்டுமெனில், முதலில் அதனை இழக்க வேண்டியது மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு தொடர்புடைய நிறுவனங்களின் (GLC / GLIC) உயரதிகாரிகள் தான் என்று அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் Datuk Dr Mohamad Akmal Saleh தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட கருத்தில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் GLC, GLIC நிறுவன தலைவர்கள் ஏற்கனவே ஆயிரக்கணக்கான ரிங்கிட் வாகன மானியங்களைப் பெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.
“மானியத்தை குறைக்க வேண்டியது உதவி தேவைப்படும் மக்களிடம் அல்ல. மாறாக, அதிக வருமானம் பெறும் தரப்பினரிடமிருந்து அதை குறைத்து, உண்மையில் உதவி தேவைப்படும் மக்களுக்கு கூடுதல் மானியம் வழங்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், மாத சம்பளம் பத்தாயிரக்கணக்கில் பெறும் உயர்பதவியிலுள்ளவர்களுக்கு எரிபொருள் மானியம் அவசியமில்லை என்றும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



