ஜொகூர் குளுவாங்கில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு-வெளிநாட்டு நபர் கைது!

top-news
FREE WEBSITE AD

(கோகி கருணாநிதி)

குளுவாங், செப்.4-

குளுவாங் மாவட்டத்தில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் தொடர்பாக, போலீசார் ஒரு வெளிநாட்டு நபரை கைது செய்துள்ளனர்.ஆகஸ்ட் 8, 2025 அன்று இரவு சுமார் 9.45 மணியளவில், ஓர் உள்ளூர் நபர் தன்னுடைய மோட்டார் சைக்கிள் காணாமல் போனதாக குளுவாங் யாப் டாவ் சா பகுதி, ஜாலான் பெர்படுவான் சாலை போலீசில் புகார் செய்திருந்தார்.

புகாரின் அடிப்படையில், குளுவாங் மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீசார் விசாரணையை முன்னெடுத்து, ஆகஸ்ட் 30 இரவு சுமார் 10.50 மணியளவில் திடீர் சோதனை நடத்தினர். அதில் குளுவாங், தாமான் எமாஸ் 3 பகுதியில் உள்ள ஜாலான் பெர்காட் சாலையில் 29 வயதான வெளிநாட்டு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபருக்கு குற்றப் பதிவு எதுவும் இல்லை என்றும், அவரின் சிறுநீர் பரிசோதனை முடிவு எதிர்மறையாக வந்ததையும் போலீசார் தெரிவித்தனர். அதேசமயம், அவர் மீது நடத்திய சோதனை நடவடிக்கையில் புகாரளிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை போலீசார் மீட்டுள்ளனர்.

இந்த வழக்கு குற்றச் சட்டத்தின் 379A பிரிவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தது ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். கைது செய்யப்பட்ட நபர், ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 3 வரை பத்து பகாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மூன்று நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் தகவல் உள்ளவர்கள் அருகிலுள்ள எந்த போலீஸ் நிலையத்தையும் தொடர்பு கொள்ளலாம் அல்லது குளுவாங் IPD- 07-7784222/07-7784256 என்ற தொலைபேசி எண்கள் அல்லது 07-7766822 என்ற ஹாட்லைன் மற்றும் 014-3656822 என்ற டேப்லெட் டி.சி.சி வழியாக தொடர்பு கொள்ளலாம்.

குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி பஹ்ரின் பின் மொஹ்மட் நோஹ் தெரிவித்ததாவது, போலீசார் தொடர்ந்து குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளில் உறுதியாக இருப்பார்கள் என்றும், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *