கழிப்பறைகளில் ஒளிந்த வெளிநாட்டுக் குடியேறிகள்! - 45 பேரைக் கைது செய்த குடிநுழைவுத்துறை
- Shan Siva
- 02 Feb, 2026
கூலாய், பிப் 2: ஜொகூர், கூலாயில் நேற்று அதிகாலை செனாயைச் சுற்றி குடிநுழைவுத்துறை மேற்கொண்டநடவடிக்கைய 45 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நடவடிக்கையின் போது ஆவணமற்ற பல புலம்பெயர்ந்தோர் தப்பி ஓடி கழிப்பறைகளில் ஒளிந்து கொள்ள முயற்சித்தனர்.
அதிகாலை 1.05 மணிக்கு 27 அமலாக்க அதிகாரிகள் ஈடுபட்ட இந்நடவடிக்கையில் 20 முதல் 45 வயதுக்குட்பட்ட புலம்பெயர்ந்தோர் கைது செய்யப்பட்டதாக ஜொகூர் குடிநுழைவுத் துறை இயக்குனர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் டாருஸ் தெரிவித்தார்.
பொதுமக்கள் கொடுத்த புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



