ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு!
- Muthu Kumar
- 05 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 5-
ஐம்பத்தெட்டாவது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டமும் அதன் தொடர்பான இதர கூட்டங்களும் நடைபெறுவதை முன்னிட்டு கோலாலம்பூரில் அதனை ஒட்டிய சில பகுதிகளிலும் பல சாலைகள் மூடப்படவுள்ளன.
இம்மாதம் 8ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை அச்சாலைகள் மூடப்பட்டிருக்கும் என்று புக்கிட் அமான் போக்குவரத்து மற்றும் அமலாக்கத்துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது யூஸ்ரி ஹசான் பஸ்ரி குறிப்பிட்டார்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் மூன்று நெடுஞ்சாலைகளிலும் பதினைந்து பிரதான சாலைகளிலும் கட்டம் கட்டடமாக சாலைத் தடுப்புகள் அமைக்கப்படும் என்று அவர் கூறினார். மெக்ஸ் ஹைவே, ஜாலான் துன் அப்துல் ரசாக், ஜாலான் அம்பாங், ஜாலான் புக்கிட் பிந்தாங் ஆகிவையும் அச்சாலைகளில் அடங்கும்.
Sempena Mesyuarat Menteri Luar ASEAN ke-58, beberapa jalan di Kuala Lumpur akan ditutup secara berperingkat dari 8 hingga 11 Julai. Antara jalan terlibat ialah MEX Highway, Jalan Tun Abdul Razak, Jalan Ampang dan Jalan Bukit Bintang.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



