ஸாராவின் தாயாரை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை தடயவியல் மருத்துவர் மறுத்தார்!
- Muthu Kumar
- 18 Sep, 2025
கோத்தா கினபாலு, செப். 18-
குயின் எலிசபெத் மருத்துவமனை தடயவியல் மருத்துவ அதிகாரி டாக்டர் லோகராஜ் ராதா. ஜூலை 17ஆம் தேதி மறைந்த ஸாரா கைரினாவின் தாயாரை பிரேத பரிசோதனை செயல்முறையை விளக்குவதற்காக சந்திக்கவில்லை என்ற கூற்றுகளை மறுத்தார்.
ஸாரா கைரினாவின் மரண விசாரணையில் ஏழாவது சாட்சியான அவர், ஸாராவின் வழக்கறிஞர் ரிஸ்வாண்டியன் எம். போர்ஹான், ஸாராவின் தாயார் நோரைடா லமத் தன்னை ஒருபோதும் சந்தித்ததில்லை என்று கூறியபோது மறுப்பு தெரிவித்தார்.
நேற்றைய விசாரணையில் ஜூலை 17 அன்று தலைமையக தடயவியல் மருத்துவத் துறையில் ஸாரா கைரினாவின் தாயார், இறந்தவரின் மற்றொரு குடும்ப உறுப்பினரான நூர் ஷிரா அப்துல்லாவை சந்தித்ததாக டாக்டர் லோகராஜ் கூறினார்.
இந்த கேள்வியை ஆரம்பத்தில் அரசு வழக்குரைஞர் இயக்குநர் நஹ்ரா டோலா மறுத்தார்.ஆனால் மரண விசாரணை அதிகாரி அமீர் ஷா அமீர் ஹசான் டாக்டர் லோகராஜை கருத்து தெரிவிக்க அனுமதித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



