மலேசியாவில் 21, 40,000 -க்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள்! - மனிதவள அமைச்சர் தகவல்
- Shan Siva
- 28 Aug, 2025
கோலாலம்பூர், ஆக 28: மலேசியாவில் தற்போது 21 லட்சத்து 40 ஆயிரத்துக்கும்
அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்கள் பணிபுரிவதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
இந்த
தொழிலாளர்கள் 15 நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று சிம் கூறினார்:
இதில் வங்காளதேசத்தினர்
– 8,03,322 என்ற எண்ணிக்கையோடு முதல் இடத்திலும், இந்தோனேசியா பிரஜைகள் - 5,43,514 என்ற எண்ணிக்கையோடு
இரண்டாம் இடத்திலும், நேபாள் 3,32. 712 மூன்றாவது இடத்திலும், மியன்மார் 1,73,630 பேருடன் நான்காம் இடத்திலும், இந்தியா1,06,929 பேருடன் ஐந்தாம் இடத்திலும், பாகிஸ்தான் 76,011 எண்ணிக்கையில் ஆறாவது
இடத்திலும் உள்ளனர். இது தவிர மேலும் ஒன்பது நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணிபுரிகின்றனர்
என்று அவர் கூறினார்.
நாட்டில்
வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் ஆவணமற்ற குடியேறிகளின் எண்ணிக்கை குறித்து கேட்ட பெரிக்காத்தான்
மாரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் அப்துல் முத்தலிப் கேள்விக்கு சிம் இவ்வாறு
பதிலளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



