சபா, கிளந்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் 3,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்!
- Muthu Kumar
- 18 Sep, 2025
கோத்தா கினபாலு, செப். 18-
சபா. கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று காலை 3,000க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
சபா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு வெளியிட்ட அறிக்கையில், நேற்று காலை 8 மணி நிலவரப்படி, 107 கிராமங்களின் 813 குடும்பங்களைச் சேர்ந்த. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.897 ஆக அதிகரித்துள்ளது.செவ்வாய்க்கிழமை 752 குடும்பங்களைச் சேர்ந்த 2,813 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவரும் 22 தற்காலிக வெள்ள நிவாரண மையம், ஒரு நிரந்தர வெளியேற்ற மையத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்த மையம் செப்டம்பர் 9 முதல் ஐந்து மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ளது. இதனிடையே கிளந்தானில் உள்ள ஃபெல்டா சிகு 1, 2.குவா மூசாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 70 ஆக இருந்தது.நேற்று புதன்கிழமை காலை 9 மணி நிலவரப்படி 212 ஆக அதிகரித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



