பூனையைத் துன்புறுத்திய குழந்தைகள் மீது 300-க்கும் மேற்பட்ட புகார்கள்!
- Shan Siva
- 01 Apr, 2026
டுங்குன், ஏப் 1: இரண்டு குழந்தைகளால் ஒரு பூனை துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, திரெங்கானு கால்நடை சேவைகள் துறைக்கு 300-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.
டுங்குனில் நடந்ததாக நம்பப்படும் இந்தச் சம்பவம் குறித்து, துறை ஒரு முழுமையான விசாரணையை நடத்தும் என்று அதன் இயக்குநர் டாக்டர் அனுன் மான் கூறினார்.
விலங்குகளுக்கு எதிரான கொடுமைச் செயல்களை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம், மேலும் இந்தச் சம்பவத்தை உடனடியாக விசாரிப்போம். இந்தச் சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்த பொதுமக்கள், விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
முன்னதாக, இரண்டு குழந்தைகளால் பூனை துன்புறுத்தப்படுவதைக் காட்டும் 18 வினாடி காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி, இணையவாசிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அந்தக் காணொளியில், ஒரு குழந்தை பூனையின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றை இழுப்பதும், மற்றொரு குழந்தை செருப்பால் பூனையின் தலையை உதைத்து அடிப்பதும் காணப்பட்டது. இந்த வழக்கு, விலங்குகள் நலச் சட்டம் 2015 (சட்டம் 772)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



