RM 500 மில்லியனுக்கும் அதிகமான நிதி சமூகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது! நாங்கள் இந்தியர்களைப் புறக்கணித்தோமா?! - சந்தியாகோவுக்கு ரமணன் பதிலடி

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, செப் 24: ஒற்றுமை அரசாங்கத்தின் செயல்பாட்டில் மலாய்க்காரர் அல்லாதோர் அதிருப்தியில் உள்ளதை தாம் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டிய கிள்ளான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோவை பிகேஆர் உதவித் தலைவர் ஆர். ரமணன் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சகம் மூலம் RM500 மில்லியனுக்கும் அதிகமான நிதி சமூகத்திற்கு வழங்கப்பட்டபோது, ​​இந்தியர்களை புறக்கணித்ததாக தம் மீது இன்னும் குற்றம் சாட்ட முடியுமா? என்று துணை அமைச்சருமான ரமணன் கேள்வி எழுப்பினார்.

சந்தியாகோ எம்.பி ஆக இருந்த காலப்பகுதியில் அவர் செய்த சாதனைகள் என்ன என்பதையும் ரமணன் கேள்வி எழுப்பினார். ஆனால், தற்போதைய நிர்வாகத்தின் கீழ் சமூகத்திற்கு அதிக நன்மைகள் கிடைத்துள்ளதாக ரமணன் நினைவூட்டினார். மேலும், மலாய்காரர் அல்லாதவர்களை புறக்கணிக்காதது என்றால் என்ன என்று கொஞ்சம் கற்றுக்கொடுங்கள் என்று ரமணன் சாடினார்.

தற்போதைய நிர்வாகத்தின் கீழ் சமூகம் அதிக நன்மைகளைப் பெற்று வருவதாக ரமணன் கூறினார். STR மற்றும் SARA ரொக்க உதவித் திட்டங்கள் மூலம் கிட்டத்தட்ட RM1 பில்லியன் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ்ப்பள்ளிகளுக்கான உதவி RM 1 பில்லியனை நெருங்கி, 400க்கும் மேற்பட்ட பள்ளிகள் இந்த முயற்சியால் பயனடைகின்றன  என்று அவர் கூறினார்.

கடந்த திங்கட்கிழமை, அரசாங்கத்தின் மடானி தொலைநோக்குப் பார்வைதான் பெரிகாத்தான் நேஷனலை மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்கள் மீது கவனம் செலுத்த கட்டாயப்படுத்தியது என்று ரமணன் கூறியிருந்தார். இதற்கு கருத்து தெரிவித்த சார்லஸ் சந்தியாகோ, இது அடுத்த பொதுத் தேர்தல் நெருங்கும்போது தவறான தீர்வை உருவாக்க வழிவகுக்கும் என்றும் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *