ஆட்டிசம் மையங்களை கூடுதலாக அமைக்க வேண்டும்-நான்சி ஷூக்ரி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ. 20 


“ஆட்டிசம் எனப்படும் மனஇறுக்க குறைபாட்டுக்கு ஆளாகிவரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களைக் கவனிக்க கூடுதல் மையங்களை அமைக்க வேண்டும் என்று மக்களவையில் அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி ஷூக்ரி கோரிக்கை விடுத்தார்.

அரசாங்கத்தால் நடத்தப்படும் ஆட்டிசம் பள்ளிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. அக்டோபர் 31ஆம் தேதி முடிவடைய சமூக நலத்துறையிடம் மொத்தம் 33 ஆட்டிசம் கவனிப்பு மையங்கள் பதிவு செய்துள்ளன. ஆனால், அந்த குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 65, 191ஆக உள்ளது என்று மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சரான நான்சி கூறினார்.

ஆட்டிசம் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருப்போருக்கு அரசாங்கம் தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யும் என்று மக்களவையில் அவர் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *