என்னை மன்னித்துவிடுங்கள்! அது என் தவறுதான்! - அன்வாரிடம் வேதமூர்த்தி மன்னிப்பு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ 9: மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அன்வார் சம்பந்தப்பட்ட தீர்ப்பின் காரணமாகவே முன்னாள் தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட்டின் சேவையை அன்வார் நீட்டிக்கவில்லை என்ற தமது கூற்று தவறானது என்று வேதமூர்த்தி தமது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். இதற்காக தாம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக அவர் பதிவிட்டுள்ளார்.

அதிகாரப்பூர்வ நீதித்துறை பதிவுகளை மதிப்பாய்வு செய்த பிறகு, அன்வாரின் எந்தவொரு மேல்முறையீட்டு வழக்குகளிலும் தெங்கு மைமுன் ஒருபோதும் குழுவில் இடம்பெறவில்லை என்பதை தாம் உறுதிபடுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பு தமக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் அப்படியோர் அறிக்கையை வெளியிட்டு விட்டதாகவும், அன்வார் சம்பந்தப்பட்ட எந்தவொரு வழக்கிலும் தெங்கு மைமூன் சம்பந்தப்படவில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளதாகவும் வேதமூர்த்தி தெரிவித்தார்.

இதற்கான முழுப் பொறுப்பையும் தாம் ஏற்றுக்கொள்வதாகவும், மேலும் அந்த அறிக்கை உண்மையற்றது என்றும் அது தனது தரப்பில் ஏற்பட்ட தவறு என்பதை ஒப்புக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த எதிர்மறையான கருத்துக்கு அன்வாரிடம் நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

இது தொடர்பான காணொளிகளை நீக்குமாறு அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sivadas Muthusamy

Leaders should have responsibilities to restrain themselves from commenting on impulse basis, or atleast to check the validity of the story they are commenting on. The least he could have done is avoiding personal attack. He failed.

Sivadas Muthusamy

Leaders should have responsibilities to restrain themselves from commenting on impulse basis, or atleast to check the validity of the story they are commenting on. The least he could have done is avoiding personal attack. He failed.