தொழிலாளர் நலன் முக்கியம்! முதலாளிகளுக்கு அன்வார் அறிவுறுத்து

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 1: தொழிலாளர்களின் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதில், முதலாளிகள் அதிக அக்கறையுடனும் இரக்கத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமைதி மற்றும் விரைவான தேசிய வளர்ச்சிக்கு இணையாக, தொழிலாளர்கள் உட்பட சமூகத்தின் அனைத்துத் தரப்பினரின் நல்வாழ்வுக்கான உத்தரவாதங்களும் வழங்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நாடு அமைதியாக இருக்க வேண்டும், தொடர்ந்து வளர்ச்சியடைந்து முன்னேற வேண்டும், ஆனால் அதே நேரத்தில், தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். அதுவே முன்னுரிமைஎன்று அவர் இன்று கோலாலம்பூர், புக்கிட் ஜாலிலில் நடைபெற்ற தேசிய அளவிலான 2026 தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தில் கூறினார்.

வலுவான வளர்ச்சி, சாதனை அளவிலான முதலீடுகள், குறைந்த வேலையின்மை மற்றும் ஆசியாவில் ரிங்கிட்டின் வலுவான செயல்திறன் உள்ளிட்ட நாட்டின் தற்போதைய பொருளாதாரச் செயல்பாடு பாராட்டத்தக்கது என்று அன்வார் கூறினார்.

இருப்பினும், இந்த முன்னேற்றங்களால் தொழிலாளர்கள், குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானக் குழுக்களில் உள்ளவர்கள், நியாயமான பலன்களைப் பெறுகிறார்களா? என்ற கேள்வியை அவர் எழுப்பினார்.

நமது நாட்டில் RM1 பில்லியன் அல்லது RM2 பில்லியன் லாபம் ஈட்டும் பெரிய நிறுவனங்களை நம்மால் பட்டியலிட முடியும். ஆனாலும் தொழிலாளர்களுக்கு RM40 சம்பள உயர்வைக்கூட அங்கீகரிக்க அவை சிரமப்படுகின்றன.

தொழிலாளர்கள் ஒழுக்கமாகவும் அதிக உற்பத்தித் திறனுடனும் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அது அனைத்து மட்டங்களிலும் உள்ள தொழிலாளர்களின் பொறுப்பாகும்.

இந்த நாடு தூய்மையாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்,. அதனால்தான் குப்பை சேகரிப்பவர்களும் துப்புரவுப் பணியாளர்களும் தியாகங்களைச் செய்கிறார்கள். 

அனைத்து பெருநிறுவனத் தலைவர்களும் தங்கள் ஊழியர்களை நடத்தும் விதத்தைப் பற்றி சிந்தித்து மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படும் அளவிற்கு வெகுமதிகள் வழங்கப்பட வேண்டும் என்று தான் பரிந்துரைக்கவில்லை என்று  அவர் கூறினார்.

தொழிலாளர்களின் ஊதியப் பிரச்சினையை ஒரு முக்கிய கொள்கை முன்னுரிமையாகக் கருதி, அரசாங்கம் அதற்குச் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும், அரசாங்கம் இதற்கு முன்னர் குறைந்தபட்ச ஊதியத்தை RM1,200-லிருந்து RM1,500 ஆகவும், அரசு சார்ந்த நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை RM3,000 ஆகவும் உயர்த்தியுள்ளதாக அன்வார் சுட்டிக்காட்டினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *