படிவம் 4 மாணவரைக் காணவில்லை!

- Shan Siva
- 12 Jun, 2025
குவாந்தான், ஜூன் 12: கடந்த ஜூன் 10 ஆம் தேதி குவந்தான், தாமான் செண்டோர் பெர்டானாவில் உள்ள தனது வீட்டை விட்டு
வெளியேறிய 16 வயது சிறுவன் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
படிவம் நான்கு
மாணவரான முகமது ஹர்ராஸ் ருஸ்லான் கமல் நேற்று காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார்
அளித்துள்ளார்.
மூன்று
உடன்பிறப்புகளில் இரண்டாவது மகனான அந்த பதின்ம வயது ஆடவரை, பள்ளியிலிருந்து மற்றொரு பிள்ளையை அழைத்து வரச் செல்வதற்கு
முன்பு, அவரது 46 வயது தந்தை
கடைசியாகக் கண்டதாக மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் வான் முகமது ஜஹாரி வான்
புசு தெரிவித்தார்.
பிற்பகல் 3.30
மணிக்கு தந்தை திரும்பி வந்தபோது, ஹர்ராஸ்
வீட்டில் இல்லை என்றும், கெமாமானில் உள்ள
பந்தாய் தெலுக் மோக்னிக் உட்பட அருகிலுள்ள பகுதிகளை உடனடியாகத் தேடிப் பார்த்தும் எந்தப் பயனும் இல்லை என்றும்
தந்தை தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஹராஸின் மொபைல் போனையும் அழைக்க முயன்றதில், அது அணைக்கப்பட்டிருந்தது. சிறுவனின் நண்பர்கள்
தங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்று கூறியதாக வான் முகமது ஜஹாரி வான் புசு இன்று
ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ஹர்ராஸ் தனது
நண்பர்களைச் சந்திக்க கோலா திரெங்கானுவுக்குச் சென்றிருக்கலாம் என்று தந்தை
சந்தேகிப்பதாக வான் முகமது ஜஹாரி கூறினார்.
சிறுவன் இருக்கும் இடம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு வான் முகமது ஜஹாரி வலியுறுத்தினார்.
Seorang remaja lelaki berusia 16 tahun, Muhammad Harras Ruslan Kamal, dilaporkan hilang sejak 10 Jun lalu dari rumahnya di Taman Cendor Perdana, Kuantan. Polis meminta orang ramai yang mempunyai maklumat tampil membantu siasatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *