பிரதமரின் முன்னாள் அரசியல் செயலாளர் ஷம்சுல் MACC-யில் வாக்குமூலம்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, நவ 28: பிரதமரின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் டத்தோஸ்ரீ ஷம்சுல் இஸ்கண்டார் முகமட் அகின், மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைய தலைமையகத்தில் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய ஆஜரானார்.

தொழிலதிபர் ஆல்பர்ட் டெய் கூறிய ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவர் ஆஜரானார்.

ஷம்சுல் இஸ்கண்டார் நண்பகல் வேளையில் எம்ஏசிசி தலைமையகத்திற்கு வந்ததாக வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

டெய் மற்றும் ஷம்சுல் இஸ்கண்டார் தவிர, டெய் உடனான வைரல் உரையாடலில் இடம்பெற்ற பெண்ணும் தனது வாக்குமூலத்தை அளித்ததாக ஆணையம் தெரிவித்துள்ளது.

 நவம்பர் 25 அன்று பிரதமரின் மூத்த அரசியல் செயலாளர் பதவியை ஷம்சுல் இஸ்கண்டார் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

டெய் மற்றும் ஷம்சுல் இஸ்கண்டார் இருவரும் சம்பந்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணையைத் தொடங்குவதாக எம்ஏசிசி முன்பு உறுதிப்படுத்தியது.

சாட்சியங்களை வழங்க தொடர்புடைய அனைத்து தரப்பினரும் அழைக்கப்படுவார்கள் என்று ஆணையம் கூறியது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *