காருக்குள் போதைப் பொருளுடன் முன்னாள் பிரதமரின் மகன் கைது!
- Muthu Kumar
- 25 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 25
காருக்குள் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், முன்னாள் பிரதமர் ஒருவரின் மகனை போலீசார் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை, டாமன்சாரா டோல் சாவடிக்கு அருகில் கைது செய்தனர்.
இருபது வயது மதிக்கத்தக்க அந்த இளைஞன் கைது செய்யப்பட்டிருப்பதை, நேற்று உறுதிப்படுத்திய சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார், "ஆம், அந்த கைது சம்பவத்தை நான் உறுதிப்படுத்துகிறேன்" என்றார்.
டாமன்சாரா சுற்றுப் பகுதிகளில் பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீசாரினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல் தடுப்பு நடவடிக்கையின்போது அவ்விளைஞன் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் கூறின.
அந்நடவடிக்கையின்போது போலிசார் அவ்விளைஞனுக்குச் சொந்தமான காரை பரிசோதனை செய்தபோது, போதைப் பொருளைப் பயன்படுத்துவதற்கானவை என்று நம்பப்படும் சில பொருட்களையும் சுமார் 30 கிராம் ஹெரோயின் போதைப் பொருளையும் கைப்பற்றினர். அவ்விளைஞனுக்கு எதிராக ஏற்கெனவே போதைப் பொருள் தொடர்பான குற்றப் பதிவுகள் இருப்பதாக அறியப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



