HRD Corp புதிய CEO-வாக சையத் அல்வி முகமட் சுல்தான் நியமனம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 21: மனிதவள மேம்பாட்டுக் கழகமான HRD Corp கழகத்திலிருந்து  ஏப்ரல் மாதம் பதவி விலகிய ஷாகுல் ஹமீத் ஷேக் தாவூத்துக்குப் பதிலாக, சையத் அல்வி முகமது சுல்தான் இன்று முதல் புதிய தலைமைச் செயல்முறை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

51 வயதான சையத் அல்வி, நிதிச் சேவைகள், வங்கி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை ஆலோசனை ஆகியவற்றில் 27 ஆண்டுகளுக்கும் மேலான தலைமைத்துவ அனுபவத்தைக் கொண்டுள்ளார் என்று HRD Corp தெரிவித்துள்ளது.

சையத் அல்வி முன்பு அக்ரோபேங்கின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், BNP இஸ்லாமிய வங்கியில் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றினார்.

மேலும் பல முக்கிய உலகளாவிய மற்றும் பிராந்திய நிறுவனங்களில் மூத்த தலைமைப் பதவிகளையும் வகித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *