12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்! லாரி ஓட்டுநர் கைது
- Shan Siva
- 01 Oct, 2025
பெட்டாலிங் ஜெயா:
சுங்கை பட்டானியில் நேற்று 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக லாரி
ஓட்டுநர் ஒருவரை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்.
கடந்த வாரம் சமூக
ஊடக தளத்தில் 22 வயது சந்தேக நபரை சந்தித்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி கூறினார்.
பின்னர் திங்கட்கிழமை அவரை சந்தித்ததாகவும், அந்த நேரத்தில் அந்த நபர் துன்புறுத்தியதாகவும்
கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவரை
நேற்று இரவு மீண்டும் சந்திக்க அழைத்த பின்னர், கம்போங் பக்கார் கபோரில் உள்ள ஒரு வீட்டில் பாலியல்
பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுவதாக பெரித்தா ஹரியான் தெரிவித்துள்ளது.
கோலா மூடா
காவல்துறைத் தலைவர் ஹன்யான் ரம்லான், சந்தேக நபர் கம்போங் பக்கார் காபோர் பகுதியில் அதிகாலை 1.30 மணியளவில் கைது
செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார்.
தண்டனைச்
சட்டத்தின் பிரிவு 376 இன் கீழ் பாலியல் பலாத்காரத்திற்காக வழக்கு
விசாரிக்கப்படுகிறது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



