ரோஸ்மா தமது கடப்பிதழை வைத்திருப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, நவ.1-

சிங்கப்பூரில் உள்ள தமது மகளைக் காணச் செல்வதற்காக மூன்று மாதங்களுக்கு தமது கடப்பிதழை வைத்திருப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதற்கு டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் செய்த விண்ணப்பத்திற்கு புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

நீதிபதி டத்தோ அஸ்மான் அப்துல்லா தலைமையில், டத்தோ அஸ்மி அரிஃபின், டத்தோ முஹமட் ரட்சி அப்துல் ஹமிட் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் குழு அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிவரை ரோஸ்மா தமது கடப்பிதழை வைத்திருக்க அனுமதித்தது.முன்னதாக, கடந்த ஜூலை 24 முதல் இன்றைய தேதி வரையில், ரோஸ்மா தமது கடப்பிதழை வைத்திருப்பதற்கு நீதிமன்றம் அனுமதித்திருந்தது.

சரவாக் புறநகர்ப் பகுதியில் உள்ள பள்ளிகளில், 125 கோடி ரிங்கிட் மதிப்புடைய சூரிய சக்தி திட்டம் தொடர்பிலான மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளில் ரோஸ்மா குற்றவாளி என்று 2022ஆம் செப்டம்பர் முதலாம் தேதி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 97 கோடி ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *