ரோஸ்மா மன்சூர் கோலாலம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்
- Tamil Malar (Reporter)
- 22 Dec, 2025
கோலாலம்பூர், டிச. 22-
முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கின் மனைவி டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சூர், இன்று கோலாலம்பூர் மன்ற வளாகம், ஜாலான் டூத்தாவில் உள்ள உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். இது அவரது கணவரின் ‘திதா அடெண்டம்’ தொடர்பான தீர்ப்பு அறிவிக்கப்படும் நாளென்பது குறிப்பிடத்தக்கது.
ரோஸ்மாவை ஏற்றிச் வந்த வாகனம் காலை 9.40 மணியளவில் மன்றத்தின் லாபி பகுதிக்குள் நுழைந்தது காணப்பட்டது. பின்னர், அவர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் மன்ற பகுதிக்குள் நுழைந்தார். முதன்மை நுழைவாயிலில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



