இன, சமய உணர்வுகளைத் தூண்டும் பதிவுகள்-வெ.10,000 அபராதம்/செலுத்தினார் பெர்சத்து தொகுதித் தலைவர்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 10-

இனம் மற்றும் சமய உணர்வுகளைத் தூண்டும் வகையிலான பதிவுகளை டிக்டோக் செயலியில் பதிவேற்றம் செய்த குற்றத்திற்காக பெர்சத்து கட்சியின் தொகுதித் தலைவர் ஒருவர் மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடம் (எம்சிஎம்சி) பத்தாயிரம் வெள்ளி அபராதத்தைச் செலுத்தியுள்ளார்.

உலு லங்காட் பெர்சத்து தகவல் பிரிவுத் தலைவர் ஷாபிக் அப்துல் ஹலீமிடமிருந்து அபராதத் தொகையைப் பெற்றுக் கொண்டதாக எம்சிஎம்சி நேற்று தெரிவித்தது. இனவாத உணர்வுகள், சமயத் தீவிரவாதக் கருத்துகள் அல்லது தேசியத் துறைகள் சம்பந்தப்பட்ட பதிவுகளைப் பரப்ப இலக்கவியல் தளங்களைத் தவறாகப் பயன்படுத்தியிருப்பதை எம்சிஎம்சி கடுமையாகக் கருதுகிறது.

சமூக ஊடகப் பயனர்கள் இயங்கலை வாயிலாகத் தகவல்களைப் பதிவேற்றம் செய்யும்போதும் பகிர்ந்து கொள்ளும்போதும் மிகுந்த கண்ணியத்துடனும் பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை நினைவூட்ட விரும்புகிறோம் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில் எம்சிஎம்சி கூறியது.

கோலாலம்பூர் கோபுரம் (கேஎல் டவர்) சர்ச்சை குறித்து இன உணர்வுகளையும் சமய உணர்வுகளையும் தூண்டக் கூடிய பதிவுகளை மார்ச் 31ஆம் தேதியன்று தமது டிக்டோக் செயலியில் ஷாபிக் பதிவேற்றம் செய்திருந்தார். அதற்காக அவருக்கு எம்சிஎம்சி பத்தாயிரம் வெள்ளி அபராதம் விதித்திருந்தது.

Seorang ketua bahagian parti Bersatu dikenakan denda RM10,000 oleh MCMC kerana memuat naik video di TikTok yang menyentuh isu perkauman dan agama. MCMC mengingatkan pengguna media sosial agar berkongsi kandungan secara beretika dan bertanggungjawab, elakkan isu sensitif yang menimbulkan ketegangan.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *