கோத்தகினபாலு விபத்து இருவர் பலி!

- Muthu Kumar
- 29 May, 2025
கோத்தகினபாலு, மே 29:
நேற்று இரவு சபாவின் கோத்த கினபாலு பெனாம்பாங்கில் உள்ள கம்போங் மோயோக் என்ற இடத்தில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் இரண்டு பேர் பலியாகினர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
54 மற்றும் 49 வயதுடைய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவ பணியாளர்கள் அறிவித்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சபா செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.இரவு 8.15 மணிக்கு அவசர அழைப்பு வந்ததை அடுத்து, ஒன்பது தீயணைப்பு வீரர்களையும் ஒரு தீயணைப்பு இயந்திரத்தையும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்ததாக அம்மையம் தெரிவித்துள்ளது.
தம்பூனானில் நடந்த ஒரு திருமணத்தில் கலந்து கொண்டு கம்போங் மட்சியாங்கிற்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் ஓட்டிச் சென்ற கார் கவிழ்ந்து பள்ளத்தாக்கில் விழுந்தது.இந்நிலையில், மேல் நடவடிக்கைக்காக உடல்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Dua lelaki berumur 54 dan 49 tahun maut manakala seorang lagi cedera apabila kenderaan yang mereka naiki terbabas ke dalam gaung di Kampung Moyog, Penampang, Sabah. Mereka dalam perjalanan pulang dari majlis perkahwinan sebelum kemalangan berlaku.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *