கெராக்கான் – MIPP இரண்டுமே DAP யுத்தியையே பின்பற்றுகின்றன! - அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜான் 4: பெரிக்கத்தான் நேஷனல் (PN) கூட்டணிக்கு பாஸ் (PAS) தலைமை வகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கெராக்கான் மற்றும் மலேசிய இந்திய மக்கள் கட்சியான MIPP, டிஏபி  பயன்படுத்தும் அரசியல் யுக்தியையே பின்பற்றுகின்றன என அரசியல் ஆய்வாளர்  மலேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அஸ்மில் தயேப் தெரிவித்துள்ளார்.

அடுத்த பொதுத் தேர்தலில்  பெரிக்காத்தான் நேஷனலுக்கு பாஸ் கட்சியின் அடித்தள ஆதரவும் கட்சி இயந்திரங்களுமே முக்கியம் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, பெர்சாத்து தலைவர் முகைதீன் யாசினின் முன்னாள் உதவியாளர் மர்சுகி முகம்மது, PN-க்கு பாஸ் தலைமை ஏற்க கெராக்கான் மற்றும் MIPP எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறியிருந்தார். பாஸின் கடுமையான நிலையைச் சமநிலைப்படுத்த முகைதீன் தலைமையே தொடர வேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடு என அவர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அகாடெமி நுசாந்தராவைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் அஸ்மி ஹசான், PN-ன் உச்ச மன்றத்தில் முகைதீன் அல்லது பெர்சாத்து தலைவர் இருப்பதால் கெராக்கான் மற்றும் MIPP-க்கு தேர்தல் பலன் கிடைக்காது என்றார்.

புதிய முயற்சியாக பாஸுக்கு PN-ன் தலைமையை வழங்கினால், மலாய் அல்லாத வாக்காளர்களை ஈர்க்க வாய்ப்பு இருக்கலாம் என்றும் அவர் கூறினார். டிஏபியுடன் இணைந்திருந்த காலத்தில் பாஸ், மலாய் அல்லாதவர்களின் ஆதரவை பெற்றிருந்தது என்றும் அவர் நினைவூட்டினார்.

முகைதீன் யாசின் ஜனவரி 1 அன்று PN தலைவர் பதவியை விலகியதைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்கு தங்களுக்கு உரிமை இருப்பதாக பாஸ் தெரிவித்துள்ளது. இதே நேரத்தில், PN தலைவர் பதவியை ரத்து செய்து,  உச்ச மன்றம் மூலம் கூட்டணியை நடத்த முகைதீன் திட்டமிட்டுள்ளார். ஆனால் இந்த யோசனை குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என பாஸ் மறுத்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *