அடுக்குமாடிக் குடியிருப்பில் அழுகிக் கிடந்த அம்மாவும் - மகனும்! - பினாங்கில் அதிர்ச்சி
- Shan Siva
- 04 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 4: பினாங்கு தெலுக் கும்பாரில் உள்ள அடுக்குமாடி
குடியிருப்பில் நேற்று ஒரு முதிய பெண்மணியும் அவரது மகனும் இறந்து கிடந்தனர்.
அக்கம் பக்கத்தினர் அப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதைக் கவனித்ததை அடுத்து
இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
உள்ளே இருந்து
பூட்டப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் கதவைத் திறக்க உதவி கோரி இரவு 7.48
மணிக்கு போலீசார் தங்களை அழைத்ததாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை
செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இருவரின் மரணத்தை
மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இறந்தவர்கள் 72 வயது லீ டெட் கிம் மற்றும் 39 வயது லாம் டோங் ஹூங் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



