கொலை செய்யப்பட்ட சிறுவனின் தாய் தற்கொலை முயற்சி! தற்போது மருத்துவமனையில் அனுமதி!
- Shan Siva
- 30 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 30: கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஆறு வயது சிறுவனின் தாய், குழந்தையின் மரணத்தைத் தொடர்ந்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் குணமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக நலத்துறை
நேற்று குடும்பத்திற்கு உளவியல் உதவி வழங்க அதிகாரிகளை அனுப்பியதாகவும், ஆனால் அவர்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் ஜொகூர்
பெண்கள், குடும்பம் மற்றும் சமூக
மேம்பாட்டுக் குழுத் தலைவர் கைரின்-நிசா இஸ்மாயில் தெரிவித்தார்.
குடும்பத்திற்கு
உளவியல் ஆதரவுடன் கூடுதலாக என்ன வகையான உதவிகளை வழங்க முடியும் என்பதைத்
தீர்மானிக்க தாயின் மருத்துவ அறிக்கைக்காக அவர்கள் காத்திருப்பதாகவும் அவர் மேலும்
கூறினார்.
ஜூலை 24 அன்று
ஜோகூரில் உள்ள தாமான் புக்கிட் இந்தாவில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட திஷாந்த்,
நான்கு நாட்களுக்குப் பிறகு நெகிரி
செம்பிலானில் உள்ள ஜெம்போலில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
அவரது 36 வயது
தந்தை கைது செய்யப்பட்ட பின்னர் குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. பிரேத
பரிசோதனையில் அவர் கேபிள் டையால் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது கண்டறியப்பட்டது.
சந்தேக நபர் தனது மனைவியிடமிருந்து பிரிந்து செல்லும் நிலையில் இருந்தது போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



