மஸ்ஜித் இந்தியா பகுதியில் ஏற்பட்ட குழி மூடப்பட்டு சாலை திறக்கப்பட்டது - DBKL
- Muthu Kumar
- 11 Nov, 2025
கோலாலம்பூர்:
தலைநகர் மஸ்ஜித் இந்தியா பகுதியில் உள்ள ஜாலான் Bunus பகுதியில் நேற்று ஏற்பட்ட திடீர் குழியால் அவ்விடம் பரபரப்பான சூழலில், தற்போது அக்குழி மூடப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் நகராண்மைக் கழகமான DBKL தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதி மாலை 6 மணிக்குள் முழுமையாக சரிசெய்யப்பட்டதாகவும், மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ஜாலான் மஸ்ஜித் இந்தியா, பின்னர் மீண்டும் பொது போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளது என்றும் DBKL தெரிவித்துள்ளது .
DBKL தொடர்ந்து அந்தப் பகுதியை உன்னிப்பாகக் கண்காணித்து ஆய்வு செய்யும் என்றும், பொது பாதுகாப்பு அதன் மிக உயர்ந்த முன்னுரிமையாக உள்ளது என்பதை வலியுறுத்துவதாகவும் DBKL மேலும் தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



