காலனித்துவ கலாச்சாரம் வேண்டாம்! - இளைஞர்களுக்கு அன்வார் அறிவுறுத்து

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ 21: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இளம் மலேசியர்களையும் ஆப்பிரிக்கர்களையும், தங்கள் சொந்த பலங்களின் அடிப்படையில் நீதியான மற்றும் முற்போக்கான எதிர்காலத்தைப் பாதுகாக்க, நீடித்து வரும் 'காலனித்துவ மனநிலை' மற்றும் ஏகாதிபத்திய கலாச்சாரங்களிலிருந்து உணர்வுபூர்வமாக விடுபடுமாறு வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திரம் அடைந்த சமூகங்களும் நாடுகளும் தங்கள் சொந்த விதிகளை வடிவமைக்க சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றும், இளைஞர்கள் தங்கள் நாடுகளையும் பொருளாதாரங்களையும் மறுகட்டமைப்பதில் நேரடியாக ஈடுபட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

எனவே, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்கள் தாங்களாகவே சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

தேசிய வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துக்காட்டினார். அத்தகைய மனநிலை மிகவும் முக்கியமானது என்று அவர் மேலும் கூறினார்.

ஏனெனில் காலனித்துவ ஆட்சி முடிவுக்கு வந்து பல தசாப்தங்களுக்குப் பிறகும், பல சமூகங்கள் இன்னும் உளவியல் மற்றும் கலாச்சார அடிமைத்தனத்தின் எச்சங்களைக் கொண்டுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அன்வார் தற்போது எத்தியோப்பியாவிற்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். அங்கு நிகழ்த்திய உரையில் அன்வார் இதனைத் தெரிவித்தார்.

நவம்பர் 18 ஆம் தேதி தொடங்கிய அன்வாரின் மூன்று நாள் பயணம் இது என்பதோடு, ஆப்பிரிக்காவிற்கு  மலேசியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அடிஸ் அபாபாவிலிருந்து, பிரதமர் நவம்பர் 20 முதல் 23 வரை தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கிற்குச் சென்று G20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வார், அதன் பிறகு நவம்பர் 23 முதல் 24 வரை கென்யாவில் உள்ள நைரோபிக்கு விஜயம் செய்கிறார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *