அரசுப் பணியாளர்கள் மட்டுமல்ல காவல் துறையினரும் ஆரோக்கியத்தை பேண வேண்டும்!
- Muthu Kumar
- 05 Oct, 2025
(எஸ்.எஸ்.மணிமாறன்)
பந்திங், அக்.5-
அரசுப் பணியாளர்கள் மட்டுமல்ல, காவல் துறையில் சேவையாற்றி வரும் அதிகாரிகளும் தங்களது ஆரோக்கியத்தைப் பேணிக் காக்கும் பொருட்டு மருத்துவப் பரிசோதனை நடவடிக்கையில் பங்கேற்று உடல் நலத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று கோலலங்காட் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் படைத் தலைவர் சூப்ரிண்டன் முகமட் அக்மால்ரிஸால் ரட்சி தெரிவித்தார்.
அதே வேளையில், அவர்களின் உடல் எடை பருமன் போன்ற அம்சங்களையும் கவனத்தில் கொண்டு உரிய பயிற்சிகளையும் மேற்கொண்டால் சீருடை அணிந்த அதிகாரிகள் தோற்றத்திற்கு எடுப்பைத் தரும் என்று அவர் கூறினார்.
பந்திங் போலீஸ் நிலையத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற 30 வயதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ரத்த தான முகாமில் கலந்து கொண்டு உரையாற்றிய சூப்ரிண்டன் முகமட் அக்மால்ரிஸால் மேற்கண்ட கருத்தை முன் வைத்துப் பேசினார். பந்திங் மருத்துவமனை தாதியர்கள் ரத்த தான முகாமில் கலந்து கொண்ட போலீஸ் அதிகாரிகளுக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



