போலீஸ் வாகனம் மோதி மோட்டார் சைக்கிளோட்டி பலி!
- Shan Siva
- 26 Nov, 2025
கோலாலம்பூர், நவ 26: பெர்லிஸின் கங்காரில் நேற்று இரவு ஒரு போலீஸ் வாகனம்
மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் பலியானார். அவரது பின்னால் இருந்தவர்
பலத்த காயமடைந்தார்.
இரவு 10.20 மணியளவில் போலீஸ் வாகனம் ரோந்துப் பணியில்
ஈடுபட்டிருந்தபோது, அந்த வாகனம் அந்த ஜோடி
மீது மோதியதாக கங்கார் காவல்துறைத் தலைவர் யுஷாரிபுதீன் யூசோப் தெரிவித்தார். இந்த
சம்பவம் ஓட்டுநரின் அலட்சியத்தால் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
24 வயது மோட்டார் சைக்கிள்
ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னால் இருந்த 25 வயது நபர் காயமடைந்தார். காவல்துறை வாகனத்தை ஓட்டி வந்த
அதிகாரி, மேல் விசாரணைக்காக கைது
செய்யப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார்.
கவனக்குறைவாக அல்லது
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக இந்த வழக்கு
விசாரிக்கப்படுகிறது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



