பசுவின் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளோட்டி பலி!

- Muthu Kumar
- 15 May, 2025
கோத்தா திங்கி, மே 15:
ஜாலான் லோக் ஹெங்-மாவாய் பகுதியில் இன்று அதிகாலை 5 மணிக்கு ஒரு பசுவின் மீது மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்.
49 வயதான நபர் பாதிக்கப்பட்டதாகவும், இச்சம்பவம் குறித்து அதிகாலை 1 மணியளவில் தகவல் கிடைத்ததாகவும் கோத்தா திங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் யூசோப் ஒஸ்மான் தெரிவித்தார்.
பண்டார் பெனாவரில் இருந்து ஃபெல்டா லோக் ஹெங் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர் கூறினார்.
சம்பவ இடத்தை அடைந்ததும், பாதிக்கப்பட்டவர் சாலையைக் கடக்கும் ஒரு பசுவைத் தவிர்க்க முற்பட்டதில் நிலைதடுமாறி பசுவின் மீது மோதி பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
Seorang penunggang motosikal berusia 49 tahun maut selepas melanggar seekor lembu di Jalan Lok Heng-Mawai, Kota Tinggi awal pagi tadi. Mangsa cuba mengelak lembu melintas jalan tetapi gagal dan meninggal di tempat kejadian.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *