பெரிய குடையை உருவாக்குகிறீர்கள்! அது மலாய்காரர்களுக்கு ஆபத்து! – மகாதிர் எச்சரிக்கை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 23: ஒவ்வொரு தலைவரும் தங்களுக்கு மட்டுமே என ஒரு "பெரிய குடை"  அரசியல் தளத்தை அமைத்தால் மலாய்க்காரர்கள் வெவ்வேறு முகாம்களாகப் பிரிந்துவிடும் அபாயம் இருப்பதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமது இன்று எச்சரித்தார்.

ஒருங்கிணைந்த மலாய் முன்னணிக்கான ஆதரவு ஊக்கமளிக்கும் வகையில் இருந்தாலும், பிரதமராகும் விருப்பமுள்ள ஒவ்வொருவரும் தமது சொந்த பெரிய குடையை உருவாக்கிக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

இதன் விளைவாக இரண்டு, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெரிய குடைகள் இருக்கும். மலாய்காரர்கள் இந்தக் குடைகளுக்கு ஆதரவு தருவார்கள், உறுப்பினர்களாக இருப்பார்கள். இதனால் கட்சி உறுப்பினர் போலவே, மலாய்காரர்கள் பிளவுபடுவார்கள். பெரிய குடைகள்  மலாய்காரர்களைப் பிரித்துவிடும் என்று அவர் தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மலாய்க்காரர்கள் தேர்தல்களில் வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைக்கும் அளவுக்கு வலிமையானவர்கள் என்றும், ஆனால் ஒரே தளத்தின் கீழ் ஒன்றுபட்டால் மட்டுமே அது சாத்தியம் என்றும் மகாதிர் கூறினார்.

என்னை நம்புங்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட பெரிய குடைகள் இருந்தால், விளைவு ஒற்றுமையின்மை மற்றும் தோல்வியாக இருக்கும்என்று அவர் கூறினார்.

இருப்பினும், அம்னோவின் முன்னாள் தலைவருமான அவர், முற்றிலும் மலாய் அரசாங்கத்தை அமைப்பது நோக்கம் அல்ல என்று வலியுறுத்தினார்.

பழைய கூட்டணியைப் போலவே, சீனர்கள், இந்தியர்கள் மற்றும் பிற இனக்குழுக்களுடன் சேர்ந்து ஒரு கூட்டணி அரசாங்கத்தை உருவாக்க முடியும் என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *