இடிந்து விழுந்த இரட்டை மாடி வீடு! அதிரஷ்டவசமாக உயிர் தப்பிய பதின்ம வயது சிறுவர்கள்

top-news
FREE WEBSITE AD

லாவாஸ், ஜூலை 19: லாவாஸில் இரட்டை மாடி வீடு இன்று திடீரென இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய இரு பதின்ம வயது சிறுவர்கள் சிறிய கீறல்களுடன் தப்பினர்.

சரவாக்கின் வடக்குப் பகுதியில் உள்ள லாவாஸ் மாவட்டத்தில் உள்ள கம்போங் செபராங் மஸ்ஜித் லாமா அவத்-அவத் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது.

லாவாஸ் நகரத்திலிருந்து 39 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கிராமத்திற்கு தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டன.

மீட்புக் குழுக்கள் வருவதற்கு முன்பு இரண்டு சிறுவர்களும் தாங்களாகவே இடிபாடுகளில் இருந்து வெளியே வந்ததாக கிராமவாசிகள் தெரிவித்தனர்.

வீடு திடீரென இடிந்து விழுந்தபோது, தாங்கள் தங்கள் அறையில் தூங்கிக் கொண்டிருந்ததாக இரண்டு சிறுவர்களும் மீட்புக் குழுவிடம் தெரிவித்தனர்.

சம்பவத்தின் போது அவர்களது மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் இல்லை என்று அவர்கள் கூறினர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *