ஆன்லைனில் இனி MC எடுக்க முடியாது! - மலேசிய மருத்துவ மன்றம் எச்சரிக்கை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ 18: ஆன்லைன் மூலம் மட்டுமே வழங்கப்படும் எம்.எம்.சி எனப்படும் மருத்துவ விடுப்பு சான்றிதழ்கள் இனி அனுமதிக்கப்படாது என்று மலேசிய மருத்துவ கவுன்சிலான MMC  தெரிவித்துள்ளது. பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்களாக இருந்தாலும் ஆன்லைன் எம்.சி.க்கு இனி அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 எந்தவொரு நோயாளியுடனும் முறையான ஆலோசனை நடத்தப்பட்ட பின்னரே மருத்துவ பயிற்சியாளர்களால் எம்.சி வழங்கப்பட முடியும் என்று கவுன்சில் தெரிவித்துள்ளது.

பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்கள் நோயாளியுடன் பொருத்தமான ஆலோசனையை மேற்கொண்ட பின்னரே சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும்.

இந்த உத்தரவைப் பின்பற்றத் தவறினால், பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்கள் MMC ஆல் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படலாம் என்று எச்சரித்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *