வருமான வரி செலுத்தத் தவறினால் வெளிநாடு செல்ல முடியாது! -

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 13 - வருமான வரியைச் செலுத்த தவறினால், சம்பந்தப்பட்டவர்கள் வெளிநாட்டிற்குச் செல்ல தடை விதிக்கப்படலாம் என்று உள்நாட்டு வருமான வரி வாரியத்தின் வருமான வசூல் துறையின் உதவி தலைமை இயக்குநர் அஸ்ஹாருடின் முகமது அலி கூறினார்.

எனவே வரி செலுத்தாமல் இருப்பவர்கள், தங்களின் பயணத்தை திட்டமிடுவதற்கு முன்னர் பயணத் தடை தொடர்பான விபரங்களை மலேசிய குடிநுழைவுத் துறையின் அதிகாரப்பூர்வ அகப்பக்கம் அல்லது மைடெக்ஸ் செயலி வாயிலாக அறிந்து கொள்ளும்படி பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

வரி பாக்கியைச் செலுத்தாத அல்லது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டப் பின்னரும் ஒத்துழைப்பு நல்காதவர்களுக்கு எதிராக 1967ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் 104வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய பயணத் தடை நடவடிக்கைகளை வருமான வரி வாரியம் உடனடியாக எடுக்காது என்று குறிப்பிட்ட அவர், மாறாக, நினைவூட்டல் கடிதங்கள், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு பின்னரே இந்நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *