டாங் வாங்கி எல்ஆர்டி நிலையத்தில் நேற்று அதிகாலை கேட்ட பலத்த சத்தம்!
- Muthu Kumar
- 15 Nov, 2025
கோலாலம்பூர், நவ 15:
டாங் வாங்கி எல்ஆர்டி நிலையத்தில் நேற்று அதிகாலை கேட்ட பலத்த சத்தம் வெடிப்பினால் ஏற்பட்டதல்ல என்று ரேபிட் கேஎல் தெளிவுபடுத்தியுள்ளது.'தீப்பொறி' போன்ற ஒலி கிளானா ஜெயா லைன் ரயிலின் மின் விநியோக கூறுகளில் ஒன்றிலிருந்து தோன்றியதாக நம்பப்படுவதாக ரேபிட் ரெயில் நிறுவன்ம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் ரயில் செயல்பாடுகளை பாதிக்கவில்லை என்று அது கூறியது.
கெலனா ஜெயா லைன் சேவைகள் தொடர்ந்து வழக்கம் போல் இயங்குவதாகவும், பயணிகளின் பாதுகாப்பு தங்களது மிக முக்கியமான முன்னுரிமையாக இருப்பதாகவும் ரேபிட் ரெயில் தெரிவித்துள்ளது.
முன்னதாக,ம் டாங் வாங்கி நிலையத்தை நெருங்கி வரும் ரயிலில் இருந்த பலத்த இடி சத்தம் கேட்டதாகவும், பெட்டியின் பின்புறத்தில் ஒரு மின்னலைக் கண்டதாகவும் அதில் இருந்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சத்தம் கேட்ட உடனேயே, பின்புற பெட்டியில் உள்ள விளக்குகள் சிறிது நேரம் மங்கி, பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்பியதாக அவர் குறிப்பிட்டதாக என் எஸ் டி தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



