சொந்த மண்ணில் முத்திரை பதிக்க இளம் வீரர்கள் ஆயத்தம்!
- Muthu Kumar
- 02 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 2-
2025 ஏதிசி பந்தயத்தின் மூன்றாவது சுற்று இந்த வாரம் செபாங் சர்வதேச பந்தயத் திடலில் நடைபெறவுள்ள நிலையில், உள்ளூர் பந்தய வீரர்களான ஆடம் டானியல், ஷார்ப் முஹ்ரிஸ் ஆகியோர் சொந்த மண்ணில் சிறப்பான முடிவுகளை பதிவு செய்யும் சிறந்த வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
இருவரும் ஷீகே ரேசிங் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டு, நடைபெறவுள்ள இரண்டு பந்தயங்களில் தங்களது சிறந்த திறனை வெளிப்படுத்துவதற்கு உயர் நம்பிக்கையுடன் கடந்த மார்ச் மாதம் கத்தாரில் நடைபெற்ற
கடைசி சுற்றுக்குப் பிறகு நான்கு மாத இடைவெளியில் மேற்கொண்ட பயிற்சிகள், சொந்த மண்ணில் ஆரவாரமான ரசிகர்கள் முன்னிலையில் மிகவும் போட்டித்தன்மையுடன் விளையாட முக்கியமாக இருந்ததாக ஷார்ப் தெரிவித்தார்.
நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு, மற்ற பந்தய வீரர்களும் மூன்றாவது சுற்றுக்கு தயாராகி இருப்பார்கள் என்று நம்புகிறேன். ஆனால், நான் மேற்கொண்ட பயிற்சிகளின் அடிப்படையில், இந்த வாரம் சொந்த மண்ணில் நடைபெறும் பந்தயத்தில் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று உறுதியாக நம்புகிறேன் என்று தற்போது மொத்த புள்ளிப்பட்டியலில் 21ஆவது இடத்தில் இருக்கும் ஷார்ப் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



