கவுன்டர் செட்டிங் விதிமீறல்! - 20 குடிநுழைவுத்துறை அதிகாரிகள் பணி நீக்கம்!
- Shan Siva
- 19 Sep, 2025
கோலாலம்பூர், செப் 19: நாட்டின் நுழைவுக் கட்டுப்பாட்டு
மையங்களில் கட்டணம் பெற்று விதிகளை மீறி
நுழைய அனுமதிக்கும் கவுன்டர் செட்டிங் செயல்களில் ஈடுபட்ட 20 குடிநுழைவுத்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும்
இதேபோன்ற குற்றச்சாட்டுகளுக்காக 227 பேர் தற்போது
விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என குடிநுழைவுத்துறைப் பொது இயக்குநர் சகாரியா
ஷாஅபான் தெரிவித்துள்ளார்.
2022 முதல் கடந்த புதன்கிழமை வரை நடைபெற்ற இந்தப் பணிநீக்கங்கள்,
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்றம் குற்றத்தை நிரூபித்ததைத்
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
இத்தகைய அதிகாரிகளைப் பணி நீக்கம் செய்வது, குடிநுழைவுத்துறை அதன்
சேவையின் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை பாதிக்கும் எந்தத் தவறுகளையும்
பொறுத்துக்கொள்ளாது என்பதை காட்டுகிறது என
சகாரியா கூறினார்.
நாட்டின் நுழைவுக் கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்
கவுன்டர்கள் போன்ற முக்கிய இடங்களில் பணிபுரியும் அதிகாரிகள் கடந்த ஆண்டிலிருந்து
தங்களுடைய சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் அவர்
குறிப்பிட்டார்.
அதை செய்யத் தவறினால் ஒழுங்குவிதிமுறை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்
அவர் எச்சரித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



