தம்பதியர் கைது! - RM 28,70000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
- Shan Siva
- 31 Oct, 2025
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் திருமணமான தம்பதியினரை பேரா
போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 28 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள மெத்தாம்பெத்தமைன்
மற்றும் ரசாயனங்களை பறிமுதல் செய்தனர்.
39 வயதான உள்ளூர் நபர், மாலை 5.15 மணிக்கு பொகோக் அசாமில் சாலையோரத்தில் கைது
செய்யப்பட்டதாக பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின்
தெரிவித்தார்.
26 வயதான பெண் அதே
நாளில் தாமான் அசாமாராவில் உள்ள ஒரு வீட்டில் தடுத்து வைக்கப்பட்டார்.
5.06 கிலோகிராம் எடையுள்ள
மெத்தாம் பெத்தமைன் என்று நம்பப்படும் ஆறு வெளிப்படையான பாக்கெட்டுகளை போலீசார்
பறிமுதல் செய்தனர்.
84.75 லிட்டர் எடை கொண்ட
போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் திரவப் பொருளையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.
RM100,000 மதிப்புள்ள இரண்டு
வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆகஸ்ட் முதல் இந்த ஜோடி போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக
நம்பப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்கள் பேராக்கிற்கு வெளியே விநியோகிக்கப்படுவதற்காகவும், 51,000 க்கும் மேற்பட்ட பயனர்களுக்கு வழங்குவதற்காகவும் திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



