கல்வத் குற்றம் புரிந்த ஜோடி கையும் களவுமாகப் பிடிபட்டது

top-news
FREE WEBSITE AD

குளுவாங், அக் 10: ஜொகூர் இஸ்லாமிய மதத் துறை (JAINJ) இன்று அதிகாலை 1.30 மணியளவில் நடத்திய சோதனையில், இரண்டாவது மாடியில் உள்ள ஹோட்டல் அறைக்கு வெளியே ஏர் கண்டிஷனிங் கம்ப்ரசரில் சட்டையின்றி நின்ற ஒருவர் பிடிபட்டார்.

40 வயது மதிக்கத்தக்க விவாகரத்து பெற்ற அந்த நபர், திருமணமான ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்த நிலையில் பின்னர் ஜன்னல் வழியாக தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

இந்நிலையில், பொதுத் தகவல் மற்றும் கண்காணிப்பின் அடிப்படையில் குழு செயல்பட்டதாக ஜொகூர் இஸ்லாமிய மதத் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் கதவைத் தட்டியபோது, ​​ ஒரு பெண் சுமார் 10 நிமிடங்கள் கழித்து கதவைத் திறந்தார். ஆரம்பத்தில், அவர் மட்டுமே அறையில் இருப்பது போல் தோன்றியதாகத் துறை தெரிவித்துள்ளது.

சிறிது நேரம் கழித்து, ஹோட்டலின் பின்னால் நின்ற ஒரு அதிகாரி, ஜன்னல் வழியாக தப்பிக்க முயன்று ஏர் கண்டிஷனிங் யூனிட்டில் ஆடவர்  நிற்பதைக் கண்டார்.

பின்னர் அதிகாரிகள் அந்த நபரை ஜன்னல் வழியாக அறைக்குள் அழைத்து வந்தனர்.

அந்த நபர் குளுவாங்கில் பணிபுரிகிறார், அதே நேரத்தில் 30 வயதுடைய அந்தப் பெண் திருமணமாகி ஒரு குழந்தையுடன் வேறொரு மாவட்டத்தில் பணிபுரிகிறார்.

வீட்டுக்குத் திரும்புவதற்கு முன்பு ஹோட்டலில்  ஓய்வெடுக்க குளுவாங்கிற்கு வந்ததாக அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷரியா குற்றவியல் குற்றச் சட்டம் 1997 இன் பிரிவு 27 இன் கீழ் குற்றம் சாட்டப்படுவார்கள். குற்றம் நிரூபணமானால் RM3,000 வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *