மயானத்தில் தகாத செயலில் ஈடுபட்ட ஜோடியினர் இன்று விடுவிக்கப்பட்டனர்
- Shan Siva
- 21 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 21: கடந்த மாதம் பினாங்கில் உள்ள ஒரு மயானத்தில் பாலியல் செயலில் ஈடுபட்டதாகக் குற்றம்
சாட்டப்பட்டு, ஓராண்டு சிறைத்தண்டனை
விதிக்கப்பட்ட தம்பதியினரின் தண்டனையை ஜார்ஜ் டவுன் உயர் நீதிமன்றம் குறைத்ததைத் தொடர்ந்து
இன்று அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
நீதிபதி ரோஃபியா முகமது,
58 வயதான எம். ஜெகதீசன் மற்றும் 37 வயதான ஹலிலா
அபு பக்கர் ஆகியோரின் குற்றத்தீர்ப்பை உறுதி செய்தார். ஆனால் அவர்களின் சிறைத்தண்டனையை மார்ச் 23
அன்று அவர்கள் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து இன்று வரை கணக்கிடுமாறு
உத்தரவிட்டார். இதன்மூலம், தண்டனைக் காலம் 28
நாட்களாகக் குறைக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட இருவரும், கடந்த மார்ச் 22 அன்று பத்து
காந்தோங் சீன மயானத்தில் அநாகரிகமாக நடந்துகொண்ட குற்றத்தை ஜார்ஜ் டவுன்
மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர். இது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377D-இன் கீழ் வரும் ஒரு குற்றமாகும், இதற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை
விதிக்கப்படலாம்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



