ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு அவசியம்! - ஃபாமி ஃபாட்ஸில்
- Shan Siva
- 26 Nov, 2025
கோலாலம்பூர், நவ 26: : ஊடகவியலாளர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாமி ஃபாட்ஸில் வலியுறுத்தியுள்ளார்.
இன்று முன்னதாக விளையாட்டு பத்திரிகையாளர் ஹரேஷ் தியோல் மீதான தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த பாமி ஃபாட்ஸில், சபாவின் கோட்டா கினாபாலுவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது இந்த விஷயம் தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார்.
ஹரேஷ் தான் போலீசில் புகார் அளித்ததாகவும், இப்போது மருத்துவ அறிக்கைக்கு ஏற்பாடு செய்து வருவதாகவும் தன்னிடம் கூறியதாக ஃபாமி கூறினார்.
விசாரணைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று நம்புவதாக தமது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
ட்வென்டிட்வோ13 செய்தி வலைத்தளத்தின் இணை நிறுவனர் ஹரேஷ், பங்சாரில் இரண்டு நபர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



