ஜொகூரில் பகடிவதை தொடர்பாக 14 வயது சிறுவன் உட்பட 4 பேர் கைது!
- Shan Siva
- 09 Feb, 2026
ஜொகூர் பாரு, பிப் 9: பிப்ரவரி 6 ஆம் தேதி ஜாலான் மேவா, கம்போங்
மெலாயு மஜிடியில் நடந்ததாகக் கூறப்படும் பகடிவதை சம்பவம் தொடர்பாக 14
வயது சிறுவன் உட்பட நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
குற்றவியல் மிரட்டலுக்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 506 இன்
கீழ் விசாரணையை எளிதாக்குவதற்காக, பிப்ரவரி 11 வரை நான்கு நாட்கள்
தடுப்புக்காவலில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளதாக ஜொகூர் பாரு தெற்கு காவல்துறைத்
தலைவர் ரவூப் செலாமாட் தெரிவித்தார்.
முன்னதாக, 23 வினாடிகள் கொண்ட காணோளியில் குறைந்தது
நான்கு சிறுவர்கள் நள்ளிரவு 12.39 மணிக்கு மற்றொரு சிறுவனைத் தாக்கியதாகக் கூறப்படும்
காட்சி பதிவாகிப் பரவலாகப் பரவியது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



