நஜிப்பின் மனுவை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்! - மேல் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு
- Shan Siva
- 13 Aug, 2025
புத்ராஜெயா, ஆக. 13 - தனது மீதமுள்ள தண்டனை காலத்தை
வீட்டுக் காவலில்
அனுபவிக்க அனுமதிக்கும் அரச உத்தரவு ஆணையை அமல்படுத்த அரசாங்கத்தை கட்டாயப்படுத்தும் முயற்சியை முன்னாள்
பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் தொடரலாம் என்று கூட்டரசு நீதிமன்றம்
தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் மாமன்னரின் கூடுதல்
உத்தரவு தொடர்பாகப் நஜிப் உயர்நீதிமன்றத்தில் செய்த நீதித்துறை சீராய்வு மனுவை எதிர்த்து சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இந்த தீர்ப்பு
வழங்கப்பட்டது.
கடந்த ஜூலை 9ஆம் தேதி
வாதங்களைக் கேட்ட பிறகு
கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளால்
வழங்கப்பட்ட இந்தத்
தீர்ப்பு, நஜிப்
உயர் நீதிமன்றத்தில் தனது
மனுவைத் தொடர்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



